Wednesday, 6 August 2008

கிழக்கை புலிகளிடம் இருந்து மீட்டதாகக் கூறப்படுவது பொய்யானது – தற்கொலைக்குமுன் OIC

கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான தகவல் என கல்முனை காவற்துறை பொறுப்பதிகாரியாக இருந்த டப்ளியூ.சீ.விஜயதிலக்க துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் காவற்துறை பதவிவேட்டில் எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார்.


கடந்த 29ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விஜயதிலக்கவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளின் போது, இந்த பதிவேடு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணை கல்முனை நீதவான் எஸ்.எம் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது. காவற்துறை அதிகாரி என்ற வகையில் தான் எந்த தவறுகளையும் செய்யவில்லை.

சட்டத்தை மதிக்கும் சிறந்த காவற்துறை அதிகாரிகளை உருவாக்கவே தாம் எப்பொழுதும் முயற்சித்து வந்ததாகவும் அத்துடன் காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் சிறந்த உறவுகளை பேணவும் முயற்சித்ததாக விஜயதிலக்க தனது குறிப்பில் கூறியுள்ளார்.

அதனை தவிர தான் தவறான அதிகாரியா இல்லையா என்பதை பிரதேச மக்கள் அறிவர் எனவும் தெரிவித்துள்ளார்.

திடீரென தனக்கு இடமாற்றம் வழங்கி தன்னைவிட கனிஸ்ட அதிகாரியின் கீழ் தன்னை கடமையாற்ற செல்லுமாறு பணித்தமை தனக்கு ஏற்படுத்திய அகௌரவம் எனவும் இதனால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாகவே தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் விஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: