Wednesday, 6 August 2008

வவுனியா சிதம்பரபுரத்தில் சுற்றி வளைப்பு தேடுதல் 3 பெண்கள் உட்பட 22 பேர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற படையினரின் சுற்றி வளைப்பு தேடுதலில் 3 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு


விசாரணைக்காக வவுனியா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களைப் பார்ப்பதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தமக்கு அதற்குரிய அனமதி வழங்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: