வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான மும்முனை முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மேற்கு வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் இருந்து மும்முனைகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் எம்.ஜ-24 ரக உலங்குவானூர்தியின் பீரங்கித்தாக்குதலுடனும் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்
மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை இன்றிரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குலை அடுத்து பாரிய உயிரிழப்பு- படைக்கல இழப்புச் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இம்முறியடிப்புத் தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
படையினரின் 'லான்ட்றோவர்' ஊர்தி உட்பட பெருமளவிலான படைக்கலங்கள், படைப்பொருட்கள் படையினரின் உடலங்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment