இந்திய இராணுவம் சார்க் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் எமது இராணுவம் சர்வதேச ரீதியில் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியின் அரசியல் பீடகூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்தியாவின் கடற்படையும் வான்படையும் சார்க் மகாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்க இங்கு வந்துள்ளன.
இதிலிருந்து ஒரு தவறான செய்தி உலக நாடுகளுக்கு செல்கின்றன. எமது நாட்டு இராணுவத்துக்கு சர்வதேச ரீதியிலான ஒரு மகாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய திறன் இல்லை என்பது அந்த செய்தி.
இது எமது இராணுவத்துக்கு பெரும் அவமானமாகும். இந்த மாநாட்டினை இங்கு நடாத்துவதன் மூலம் இலங்கையில் பாதுகாப்பு நிலைமை நன்றாக இருப்பதாக உலகுக்கு காட்ட முனைகின்றது.
அரசு, வெளிநாட்டுப் படைகளைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துவதால் அந்தக் குறிக்கோளை அடைய முடியாது. இதன் மூலம் எமது சுற்றுலாத்துறை கேள்விக் குறியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment