தற்போது நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 9500 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து இராணுவ பேச்சாளன் உதய நாணயக்காரவிடம் அப்பத்திரிகை வினவிய போது : 2008 ஜனவரி மாதம் வரை 15.000 பேர் வரை இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் இவர்களுள் அரசின் மன்னிப்புக் காலத்தில் திரும்ப வந்த 4000 பேர் சேவையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் மேலும் தப்பியோடியவர்கள் வந்து சேர இராணுவத்தால் கொடுக்கப்பட்ட மேலதிக கால அவகாசத்திற்கிடையில் அண்மையில் மஹிந்த அனுராதபுரத்தில் பொதுமக்களை சந்தித்த வேளை தாய் மண்ணைக் காப்பதற்காக மறுபடியும் சேவையில் வந்தினைந்து கொள்ளும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பின் மேலும் 1500 இராணுவத்தினர் மறுபடியும் சேவையில் இணைந்துள்ளனர்.
மற்றைய தப்பியோடியவர்களைக் கைது செய்து இராணுவ நீதிமன்றின் முன் நிறுத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் தொடங்கப்பட்ட காலத்தில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவாகள் 25,000 மேல். அவர்களை கடந்த காலங்களில் சட்டப்படி தமது சேவையிலிருந்து விலக சந்தாப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனவும் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
தப்பியோடியவர்களின் இவ் எண்ணிக்கை தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கென புதிதாக சோத்துக் கொள்ளப்பட்ட படையினர் எனவும் அறிய வருகின்றது.
நன்றி லங்காடீசென்ட்.
Saturday, 2 August 2008
தற்போதைய யுத்தத்தின் போது இராணுத்திலிருந்து 9500 பேர் வரை தப்பியோடியுள்ளனர். - ராவய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment