Wednesday, 13 August 2008

4மாதங்களில் சிறீலங்கன் எயார்லைன்ஸ_க்கு 8100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது -ரவி கருணாநாயக்க

சிறீலங்கன் விமான சேவையை அரசாங்கம் பொறுப்பேற்று 4 மாதங்களில் 8100 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டமின்மையால் அரச நிறுவனங்கள் நாளுக்கு நாள் நஷ்டத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர் உலக சந்தையில் விலை அதிகரிப்பு ஏற்படும் போதெல்லாம் இலங்கையில் அவற்றின் விலையை அரசாங்கம் இரட்டிப்பாக அதிகரிக்கிறது தற்போது உலகசந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துள்ளது


ஆனால் இலங்கையில் அதன் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தொடர்ந்தும் அதிகரித்து மக்களை மேலும் இன்னல்களுக்குள் தள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது


அமைச்சருக்கான செலவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அரசாங்கம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது மக்களின் வறுமை நிலையை அறிந்து எரிபொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

No comments: