Wednesday, 13 August 2008

திருகோணமலையில் மிகப்பழமை வாய்ந்த ஆலயச்சிதைவு கண்டுபிடிப்பு

திருகோணமலை சேருநுவர பகுதியிலுள்ள தங்கநகர் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்து ஆலயச் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிள்ளையார் கோவிலுக்கு அருகில் சனசமூக நிலையம் அமைப்பதற்கான அகழ்வுப் பணியில் நேற்று ஈடுபட்டபோது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் உட்பட பல தொல்பொருள்கள் இதன்போது மீட்கப்பட்டன.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், தாமும் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெளத்த கோவிலின் நிதைவுகளை ஓமா ஓயா பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளத்த, சிங்கள பீடம் அவசர அவசரமாக அறிவித்துள்ளது.

திருகோணமலை உட்பட தமிழர் தாகயத்தின் பல பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: