அம்பாறை ஆலையடி வேம்புப் பகுதியில் இரவு நேரங்களில் சீருடையில் செல்லும் படையினர் பெண்கள் மீது பாலியல் வன்முறையை மேற்கொள்ள முயற்சிப்பதாக தனக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம் பெற்றபோதும் அவை தொடர்பாகக் கவனமெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததால் அவை சற்றுக் குறைந்திருந்தன.
எனினும் கடந்த 5ம் திகதி கண்ணகிபுரம் சின்னப்பனங்காட்டுப் பகுதியில் இரவு நேரத்தில் சீருடையினர் வீடுகளுள் புகுந்து இரு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்தனர்.
அவர்கள் சீருடையினருடன் கடுமையாகப் போராடி கூக்குரலிட கிராமத்தவர் வந்ததால் படையினர் காரியம் கைகூடாமல் சென்று விட்டனர். அவ்விரு பெண்களும் காயத்துடன் தப்பியுள்ளனர்.
எனினும் இது குறித்து எங்காவது முறைப்பாடு செய்தாலோ வெளியில் தெரிய வந்தாலோ கொன்று விடுவோம் எனப் படையினர் மிரட்டிச் சென்றதால் இப் பெண்கள் பொலிஸாரிடமோ மனித உரிமை அமைப்புக்களிடமோ முறைப்பாடு செய்யவில்லை.
சோதனை என்ற பெயரில் இரவு நேரத்தில் மதில் ஏறிக்குதித்து வரும்படையினர் பெண்கள் மீது மேற்கொள்ளும் இவ்வன்முறை தொடர்பாக உரியவர்களின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
Wednesday, 13 August 2008
அம்பாறை ஆலையடி வேம்புப் பகுதியில்; - சீருடையில் செல்லும் படையினர் பாலியல் வன்முறைககளில் - கே.பத்மநாதன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment