தனியார் மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் மீண்டும் பொறுபேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மா உற்பத்தி கூட்டுத்தாபனம் போன்ற தனியார்மயப்படுத்தப்பட்ட 40 அரச நிறுவனங்களை அரசாங்கம் பொறுபேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்களை பொறுபேற்றால் அரசாங்கம் அதிக வருமானத்தை ஈட்டமுடியும் என இது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவொன்று அரசாங்கத்திடம் அறிக்கை ஒன்றின் மூலம் பரிந்துரை செய்துள்ளது.
தனியார்மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் இந்த அறிக்கை விரைவில் கையளிக்கப்படும் என அரச உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Saturday, 9 August 2008
தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் 40 ஐ அரசாங்கம் மீளவும் பொறுப்பேற்க உள்ளது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment