Saturday, 9 August 2008

அரச ஊடகமான தினமினவின் முரண்பட்ட செய்திகளால் அதன் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது

யுத்த வெற்றிகள் குறித்து அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதாகப் பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்க ஊடகமான தினமின நாளேட்டில் மன்னார் பிரதேசத்தின் புலிகளின் இறுதி முகாம் இரண்டு தடவைகள் மீட்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 17ம் திகதி விடத்தல்தீவு கைப்பற்றப்பட்டதாகத் தினமின நாளேட்டின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டதுடன், ஆகஸ்ட் 8ம் திகதி 20 வருடங்களுக்கு பின்னர் மன்னார் பிரதேசத்தைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக மீண்டும் செய்தி வெளியிடப்பட்டது.

இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மன்னார் முகாம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் இரண்டு மாதங்களிலும் முதல் தடவையாகக் கைப்பற்றப்பட்டதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தம் தொடர்பான மெய்யான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மாறாக மக்களைப் பிழையான வழிக்கு இட்டுச் செல்லும் இவ்வாறான செய்தி வெளியீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

No comments: