கட்சி நிதி என்ற போர்வையில் தெரிவு செய்யப்பட்ட பிரபல வர்த்தர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதியினால் நிதி திரட்டப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஞாயிறு இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் ஒருவரான சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரே இந்தத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தகர்களுக்கு விருந்துபசாரத்தை வழங்குவதற்காக பெருமளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வர்த்தகர்களுடான இணைப்பை ஏற்படுத்துவதற்கு 20 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் இரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியலிருந்து ஆளுங்கூட்டணியில் இணைந்து கொண்ட பலர் இந்த குழுவில் அங்கம் வகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வர்த்தகர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:
Post a Comment