Friday, 15 August 2008

வடக்கில் 8 மாதங்களில் 250000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - ஐக்கியநாடுகள் சபை

லங்கையின் வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


யுத்தம் காரணமாகவே இந்த இடம்பெயர்வு ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் அவர்கள் மோதல்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில் இடம்விட்டு இடம் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது என ஏசியா நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.


அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய நிவாரணங்களை கொண்டு செல்ல இலங்கை படையினர் தடையேற்படுத்தி வருவதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் ஆயிரக்காண மக்கள் இடம்பெயர்ந்து மரநிழல்களில் வசித்து வருவதாகவும் அதில் கூறிப்பட்டுள்ளது. எனினும் வன்னிப் பிரதேசத்திற்கு அனுப்பபடும் உணவுப் பொருட்களை விடுதலைப்புலிகள் கொள்ளையிடுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இதேவேளை வடக்கு பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிவகை குறித்து ஆராயுமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண பணியாளர்களை அங்கு அனுமதிக்குமாறும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் யுத்தம் நடைபெறும் மூன்று மாவட்டங்களில் ஒரு பிரதேசத்தை யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் ஆயர் விடுதலைப்புலிகளின் சார்பில் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் விடுதலைப்புலிகளுக்காக இவ்வாறான கோரிக்கைளை ஏற்கனவே விடுத்திருந்தாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குற்றம்சுமத்தியுள்ளது.

No comments: