Sunday, 3 August 2008

ஐரோப்பிய ஒன்றியக் கொழும்புக் கிளை அதிகாரிகளைப் பணிநீக்கத் திட்டம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்புக் கிளையில் பணியாற்றுவோர் பக்கச் சார்பாகச் செயற்படுவதாகவும், அவர்களைப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான பிரேரணை வெகுவிரைவில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இருதின வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கிளைக் காரியாலயம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் கொள்கைகளுக்குப் புறம்பான வகையில் செயற்படுவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றப் பிரதிநிதி நெரஞ்சன் தேவாதித்ய தெரிவித்துள்ளார்.

No comments: