Sunday, 3 August 2008

யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி மாணவி ஒருவர் படுகாயம்


யாழ்ப்பாணம் அரியாலையில், வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த பள்ளி மாணவி ஒருவர் நிலக்கண்ணி வெடியில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரியாலை முல்லி வீதியைச் சேர்ந்த 13 வயதான திச்சின்தியா என்ற மாணவியே படுகாயமடைந்தவராவார்.

யாழ்ப்பாணத்தில் நிதியின்மை காரணமாக நிலக்கண்ணி வெடியகற்றல் பணிகள் ஸ்தம்பித்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments: