அம்பாறை மரதன்கடவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் சிவில் பாதுகாப்பு படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் விசேட அதிரடிப்படைச் சிப்பாய் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.15 அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment