கிளிநொச்சியைச்சொந்த இடமாகக்கொண்ட மூன்று பல்கலைக்கழக மாணவர்களை தெஹிவளை காவற்துறையினர் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். தெஹிவளை பாடசாலை வீதியில் தங்குமிடம் ஒன்றை எடுத்துத்தங்கிருந்த இந்த மூவரையும் வீட்டைச்சோதனைபோடும்போதே அவர்கள் மூவரும் கிளிநொச்சியை சொந்த இடமாகக்கொண்டுள்ள காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பல்கலைக்கழக என்.டி.ரி. பிரிவில் முதலாம் வருட மாணவனான தவராசா ஜீவிதன், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களான அருமைநாதன் கண்ணராமன், அன்டனி ராஜ்குமார் அகியோரே சந்தேகத்தின்பேரில் தெஹிவளைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:
Post a Comment