Friday, 15 August 2008

நாராயணனுக்கு சிங்கள பெளத்த இனவாதக்கட்சிகள் கடும் கண்டனம்

 இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணனுக்கு சிங்கள பெளத்த இனவாதக் கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

சிறீலங்கா அரசு போரில் வெற்றி பெற்றாலும், தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை என, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாராயணன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகக் கருத்துரைத்த JVP கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, சிறீலங்காவின் இறையாண்மையில் இந்தியா தேவையற்று தலையிட்டு, காலனித்துவ ஆட்சி முறையில் ஆதிக்கம் செலுத்த முனைவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு பிராணவாயு கொடுத்து, தமது படையினரது தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் நாராயணனின் கருத்துக்கள் அமைந்திருப்பதாக, ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

No comments: