மட்டக்களப்பில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் ஆயுததாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் துணை இராணுவக்குழுவான ஈபிடிபி குழுவின் ஆயுததாரி ஒருவரே இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் அப்பாஸ் என அழைக்கப்படும் 28 அகவையுடைய ஆறுமுகம் வரதராஜன் என ஈபிடிபியினர் அறிவித்துள்ளனர். காத்தான்குடியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்திலிருந்து நாவற்குடா நோக்கிச் சென்ற போதே குறித்த ஆயுததாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment