கஞ்சிகுடிச்சாறு வேப்பேரிக்குள காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளை தேடி அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேப்பேரிக்குளம் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் வருகையை முன்கூட்டியே அறிந்து நேற்று காலையே பொறி வெடிகளை விடுதலைப்புலிகள் பொருத்திவிட்டு காத்திருந்தனர்.எதிர்பார்த்தபடி, நேற்று மாலையளவில் அப்பகுதியால் வந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கினர்.

No comments:
Post a Comment