இராணுவ படையணிகள் கிளிநொச்சியில் இரண்டு கிராமங்களையும் வவுனியா பாலமோட்டைப் பகுதியில் உள்ள பலமிக்க பதுங்குகுழி மற்றும் யுத்த அகழி ஆகியவற்றை நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களில் 29 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை படையினர் கிளிநொச்சி கச்சிக்குடா கிராமத்திற்குள் பிரவேசித்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
கச்சிக்குடா பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் படைச்சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் காயமடைந்துள்ளார்.
எனினும் கிளிநொச்சிக் கிராமங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டமை குறித்த படையினரின் அறிவிப்பு தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை.
Tuesday, 12 August 2008
கிளிநொச்சியில் இரண்டு கிராமங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன – உதயநாணயக்கார: புலிகள் தரப்பில் தகவல் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment