மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார்.
கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது.
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அது தொடர்பாகவும் சிறிது நேரம் எடுத்துக் கூற அனுமதி வழங்கபட வேண்டுமென மனோ கணேசன் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தார்.
எனினும், இந்தச் சந்திப்புக்கு ஐந்து நிமிட நேரம் மட்டுமே ஒதுக்கபட்டுள்ளதாகவும் அந்த நேரத்தில் இந்தியப் பிரதமருடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து விட்டுச் செல்லுமாறும் இதற்காக மனோ கணேசனுக்கு சனிக்கிழமை மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தூதரகத் தரப்பினர் அறிவித்திருந்தனர். இதையடுத்தே இந்தச் சந்திப்பில் எதுவித பிரயோசனமுமில்லையெனக் கூறி மனோ கணேசன் இந்தச் சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்.
நன்றி தினக்குரல்
Monday, 4 August 2008
மன்மோகன் சிங்குடனான சந்திப்பை மனோ கணேசன் தவிர்த்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment