சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.
ஈழத்தின் பிராந்திய நாடுகளான சார்க் நாடுகளின் பாதுகாப்பை முன்னிட்டு ஜுலை 26ஆம் நாள் முதல் இன்று நள்ளிரவுவரை போர் நிறுத்தம் செய்வதாக, கடந்த 21ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இருப்பினும் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை நிராகரித்த சிறீலங்கா அரசு, வடக்கில் போர் தொடரும் என அறிவித்திருந்தது.
போர் நிறுத்தம் அறிவி்த்த 10 நாட்களுக்குள் விடுதலைப் புலிகள் தம்மை மீளக்கட்டியெழுப்ப முனைவதாகவும், சிறீலங்கா அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில் வவுனியா, வவுனிக்குளம், மன்னார், மணலாறு, முகமாலை, நாகர்கோவில் களமுனைகளில் சிறீலங்கா படையினரது வலிந்த தாக்குதல்கள் தொடர்ந்தன.
விடுதலைப் புலிகள் தரப்பில் தற்காப்பு, மற்றும் முறியடிப்புத் தாக்குதல்கள் மட்டும் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் போர் நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்கள் எதனையும் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.
Monday, 4 August 2008
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment