வன்னியில் இடப்பெயர்வு அவல நிலையிலும், யாழ் குடாநாட்டில் மின்சாரத் துண்டிப்பின் மத்தியிலும் நாளை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கின்றது.
1818 பரீட்சை நிலையங்களில் நாளை பரீட்சை நடைபெறவுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
2 இலட்சத்து 93 ஆயிரத்து 819 பாடசாலை மாணவர்களும், 94 ஆயிரத்து 757 மாணவர்கள் வெளிவாரியாகவும், நாளைய பரீட்சையில் தோற்ற இருக்கின்றனர்.
வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களை முன்னிட்டு இம்மாதம் 22, 23, மற்றும் 24ஆம் நாள்களில் பரீட்சைகள் நடைபெறாது எனவும், செப்ரெம்பர் 3ஆம் நாள் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 4 August 2008
வன்னில் இடப்பெயர்வு அவலத்தின் மத்தியில் நாளை உயர்தரப் பரீட்சை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment