பொது இடங்களில் வைத்து புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும்
இது தொடர்பான சட்ட விதிகள் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும், பொது இடங்களிலும் புகை பிடிக்கும் செயற்பாடு மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது என்று பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
2006ம் ஆண்டின் 27ம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் 39ம் இலக்க விதிமுறையின் பிரகாரம் பொது இடங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன்,
இதனை மீறுவோருக்கு எதிராக இரண்டாயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறிவிடுவது அல்லது ஒரு வடருத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன் தண்டப்பணம் அறவிடப்பட வேண்டுமென்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சட்டம் ஆரம்பத்தில் அமுலப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது முறையாக கடைப் பிடிக்கப்படாததால் பொது இடங்களில் வைத்து புகைப்பிடிக்கும் நடவடிக்கை அதிகரித்து செல்வதாகவும் இதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த சட்டத்தை அதிகாரிகள் முறையாக அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment