Sunday 10 August 2008

யாழின் பக்கசார்பு

உண்மையில் நான் சுமைளை சுமந்துதான் வலைப்பூ நடத்துகிறேன்,யாழ் என்னை தடை செய்யலாம் ஆனால் என் செய்திகளை தடைசெய்ய முடியாது

சிங்களச்செய்திகளை மொழிபெயர்து போடுகின்றேன் அதே செய்தி சிறிது நேரத்தில் தமிழ் வின்னில் வரும் பின்பு நான் திருடனாக்கப்படுவேன்

உதாரணம்:இந்த செய்தி தமிழ்வின்னில் வந்த நேரம்

காரைநகர் தரவைக் குளத்தில் மண்அகழ்வதை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம் காரைநகர் தரவைக்குளத்தில் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரிக்கை

[ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2008, 03:22.37 AM GMT +05:30 ]

ஆனால் இது ஏற்கனவே ஐசூர்யாவில் வந்துவிட்டது

பிரசுர நேரம்: 09 ஓகஸ்ட் 2008

http://isoorya.blogspot.com/2008/08/blog-post_3176.html


யாழும் புதினமும் தமிழ்நாதமும் தான் தமிழ் தேசியம் பேசவேண்டும் என்னும் அடிப்படை வாததில் இருந்து விடுபடவேண்டும்

யாழ் யாரால் இயங்க்குகின்றது யார் நிதியுதவி செய்கிறார்கள் என ஒரு பெரும்புள்ளி இரகசியங்களை பரகசியமாக்க முற்பட்ட வேளை அதை முன்நின்று தடுத்தவன் நான்.

ஆனால் இன்று நான் திருடனாக சித்தரிக்கப்பட்டுள்ளேன் உண்மையில் செய்திதிருடுபவன் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதேவேளை எனது செய்திதள‌த்தின் முடிவாக்கம்(ஆங்கிலத்தில் பிறசன்ர்)அழகாக இருக்கும் அதை தமிழ் வின் போன்ற பெரிய திருடர்கள் திருடுகிறார்கள்.


யாழ் கள உறவு ஒருவரின் ஆதங்கம்:

புதினம் உதைத்தானே செய்யுது. தென்னிலங்கை ஊடகம் எண்டு தான் மொழிபெயர்த்து போடுது. அதை NewsBot எண்டு ஒருத்தர் ஓடி ஓடி ஒட்டுறார் இஞ்சை.

தன்னை விட ஐசூரியா நல்லா செய்யிறார் எண்டு NewsBot இக்கு பொறாமை போல கிடக்கு. நிர்வாகத்துக்கு அள்ளி வைச்சு வேடிக்கை பாக்கிறார்.

tamilwin ,orunews உம் உதைத்தான் செய்யுது. 100 டொலருக்கு ஒரு இணையத்தை பதிஞ்சு போட்டு வெட்டி ஒட்டினா மொழிபெயர்த்துப் போட்டா செய்திச் சேவை, ஊடகம் எண்றாங்கள். அதையே குடிலில செய்தா 108 கேள்வி கேக்கிறாங்கள்.

2 comments:

Anonymous said...

புதினம் என்ற ஒரு விறப்பான பக்கத்தோடு உங்களை ஒப்பிட ஒரு காலத்திலும் முடியாது

Anonymous said...

உம்முடைய இஞ்த இலவச இணைப்பில் வருபவை புதினம்இ சங்கதி லங்காவிசி, தமிழ்வின் ஆகியவற்றில் வருபவை மட்டுமெ