Friday, 15 August 2008

வன்னி மோதலில் விடுதலைப்புலிகள் தோல்வியடைவார்கள் - றோ அறிக்கை சமர்ப்பிப்பு என்கிறது சிங்கள நாளிதழ்

வன்னி மோதலில் விடுதலைப்புலிகள் தோல்வியடைவார்கள் என இந்திய றோ உளவுப்பிரிவினர் இந்திய அரசாங்கத்திற்கு முதல் முறையாக அறிக்கை ஒன்றை சமாப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை செய்மதிப் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தருணர்கள் மூலம் றோ உளவுப் பிரிவினர் இந்த மோதல்களை கண்காணித்துள்ளனர்.


கொழும்பில் உள்ள இந்தியத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. தமது முடிவை உறுதிப்படுத்திக் கொள்ள இந்திய றோ உளவுத்துறையின் டெல்லியில் உள்ள தலைமையத்தினர் இஸ்ரேலின் ஒபேக் செய்மதியின் உதவியையும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.


அத்துடன் விடுதலைப்புலிகளின் கடற்பிரிவினர் குறித்து இந்திய டோனியர் கப்பல் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முடியாமை,

விடுதலைப்புலிகளின் ஆயுத வலையமைப்பை சேர்ந்த 6 பேர் அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கைதுசெய்யப்பட்டமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் நிதி திரட்டுவதற்கு தடையேற்பட்டமை மற்றும் கிழக்கு மாகாணம் கைப்பற்றபட்டமை ஆகிய விடயங்கள் விடுதலைப்புலிகள் வலுவிழப்பதற்கான காரணிகளாக அமைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments: