வவுனியாவில் இருந்து பணத்தை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதால் கிளிநொச்சியில் பணத்துக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் அரச வங்கியில் இருந்து 50ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறமுடியாத நிலை தோன்றியுள்ளது.
கிளிநொச்சி செயலகத்தில் புதனன்று (13) நடந்த அத்தியாவசிய தேவைகள் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரச வங்கிகளின் முகாமையாளர்கள் இந்த விடயத்தை எடுத்துக் கூறினர்.
ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல் காரணமாக தமது வங்கி அதிகாரிகள் வவுனியாவிலிருந்து பணத்தை எடுத்துச் செல்ல மறுக்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பணத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியாததால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
கிளிநொச்சி அரச வங்கிகளில் இருந்து ஒருவர் 50ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியாதவாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment