Friday, 15 August 2008

ஐ.நா. விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இலங்கை வருகை.-வன்னியில் இடம்பெயர்ந்து துன்பப்படும் சிறுவர்கள் குறித்து கவனம் செலுத்துவாரா??

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி நேற்றிரவு இலங்கை வந்தார்.

தனது விஜயத்தின் போது அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புக்கள் தமது படையணிகளில் சிறுவர்களை பலவந்தமாக இணைத்து வருவது தொடர்பாகவும் ஐ.நா. விசேட பிரதிநிதி கவனஞ் செலுத்தவுள்ளார்


வன்னியில் இடம்பெயர்ந்து துன்பப்படும் சிறுவர்கள் குறித்து கவனம் செலுத்துவாரா



எப்போது பரீட்சை எனத் தெரியாத நிலையில் மாணவர்கள் நாளை மறுதினம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் தமக்கான பரீட்சை எப்போது எனத்தெரியாத நிலையில் பல இடம்பெயர்ந்த மாணவர்கள் இருக்கும் நிலையைக் காணமுடிகிறது.



குறிப்பாக விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்து பலமுறை இடம்பெயர்வுகளை சந்தித்து பாதிப்புக்குள்ளான நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்குச் செல்லமுடியாத கல்விச்சூழலில் இருந்துவிலகியுள்ள நிலையினைக் காணமுடிகிறது.

இது தொடர்பில் விடத்தல்தீவு தூயNஐhசப்வாஸ் ம.வி.தரம் ஐந்தைச் சேர்ந்த சிறுமி கே.சோபா கருத்துத் தெரிவிக்கையில், எமக்கு எப்போது பரீட்சை என்பது தெரியவில்லை. நாங்கள் மூன்று மாதத்திற்கு மோலாக பாடசாலைக்கு செல்ல முடிவில்லை என்றார். இது போல பல சிறுவர்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: