மேற்குலக நாடுகளிடம் கையேந்தி ஆட்சி நடத்தி வந்த காலத்தை முடிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாரம்பரியங்களை குழிதோண்டிப் புதைத்து சிலர் ஆட்சி நடத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மரபு ரீதியான பாரம்பரியங்களை பின்பற்றி நல்லாட்சி நடத்தி வருவதாக??? அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய ஓர் சூழ்நிலையை உருவாக்குவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும்??? அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment