ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரனின் படுகொலையுடன் நோர்வே அரசிற்கு தொடர்பு இருப்பதாக லங்கா கார்டீயன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மதிவன் மாஸ்டரினால் படுகொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
படுகொலையை மேற்கொள்வதற்காக நோர்வேயினால் நிதியுதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாஞ்சேனை கொமர்சல் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசியல்வாதிகளை படுகொலை செய்வதற்கு நோர்வே அரசாங்கம் நிதியுதவி வழங்கி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர் அரசாங்கப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என அரச பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஏற்றுக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment