மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காத்தான் குடி தொழில்நுட்பக்கல்லூரிக்கு அருகில், இன்று முற்பகல் 11.55 அளவில் இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானவர்,
ஈ.பீ.டீ.பீயின் தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் காத்தான்குடி காவல்துறை மையத்தில் சுமார் 200 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது.
கொலையாளிகளோ அல்லது கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் என்ன என்பது பற்றியோ இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Friday, 15 August 2008
(2 nd lead)காத்தான் குடியில் தினமுரசு பத்திரிகை விற்பனையாளர் சுட்டுக் கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment