மடுமாதா ஆலய வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பலி பூசையுடன் ஆரம்பமாகவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார்.
இன்றைய உற்சவத்தின் பொருட்டு கொழும்பு, மற்றும் அநுராதபுர மாவட்டங்;களைச் சேர்ந்த குருமுதல்வர்களும் மடுமாதா ஆலயத்துக்கு வருகைதந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு 500 பொது மக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதவாச்சியிலிருந்து பேரூந்து மூலம் அவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மடுமாதா ஆலயத்தில் தங்கியிருப்பதற்கு இன்று மாலை வரையுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சர்களான மில்ரோய் பெர்னாண்டோ, சரத் குமார குணரத்ன, நியோமல் பெரேரா ஆகியோரும் இன்றைய மடுஉற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment