Sunday 3 August 2008

வாடகைக் காரில் ஹோட்டலுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் - கால் தடக்கி நிலத்தில் வீழ்ந்த நேபாளப் பிரதமர்


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும்.

சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர்.

இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார்.

தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். எனினும் எதுவுமே வந்து சேரவில்லை.

இந்நிலையில் "தாஜ்சமுத்திரா' என்ற இலட்சினையுடன்கூடிய வாடகைக் கார் ஒன்று அங்கு ஓடித்திரிவதைக் கண்டு அந்த சாரதியை அணுகி தன்னை ஹோட்டல் விடுதியில் கொண்டு சென்று சேர்க்குமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை, வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த போதிலும் குறித்த காரில் "தாஜ்சமுத்திரா' இலட்சினை பதித்திருந்ததன் காரணமாக ஒருவாறு அது ஹோட்டலை சென்றடையக்கூடியதாக இருந்தது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இறுதியில் எந்தவிதப் பாதுகாப்புமின்றி வாடகைக் காரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு இந்திய அதிகாரிகளை மிகவும் அதிருப்தி அடையச் செய்திருக்கும் என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட இந்த தவறு தொடர்பில் எம்.கே.நாராயணனிடம் குறித்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி நேரில் சென்று மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கால் தடக்கி நிலத்தில் வீழ்ந்த நேபாளப் பிரதமர்
சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்துக்கு வருகை தந்த நேபாளப் பிரதமர் கிரியா பிரசாத் கொய்ராலா கால் தடக்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றது.

பிற்பகல் சார்க் அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சார்க் வலய நாடுகளின் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அழைத்து வரப்பட்டனர்.

நேபாளப் பிரதமர் பிரசாத் கொய்ராலா வாகன பவனியாக அழைத்து வரப்பட்டார். மண்டபவாயிலில் காரால் இறங்கிய இவரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரதான மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பிரசாத் கொய்ராலா பிரதான மண்டப வாயிலுக்கு அருகில் கால் தடக்கி திடீரென கீழே விழுந்தார்.

இதனை எதிர்பார்க்காத வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் அவரை தூக்கினர். அதன் பின்னர் அவர் பிரதான மண்டபத்துக்குச் சென்றார். பிற்பகல் 3.35 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது.

நேபாளப் பிரதமர் பிரசாத் கொய்ராலாவுக்கு வயது 83 ஆகும். சார்க் உச்சி மாநாட்டுக்கு வருகை தந்த தலைவர்களில் வயது முதிர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

MK Narayananan is anti tamil:
MK Narayananan is a selfish (poonool) bramins:
I am happy he was insulted by mahindha bros:even than,he will extend helping hand to singala bastards:reasons?
Narayanan alone knows it!