சித்தாண்டி மாவடிவேம்புப் பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் ஒன்றாகப் பாதுகாப்புக் கடமையில் நின்றபோதும், இருவர் மீது மாத்திரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்தே மூன்றாவது இராணுவ வீரரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு யார் காரணம் என்ற விடயம் தெரியாத நிலையிலேயே மூன்றாவது இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment