Thursday, 14 August 2008

சிறீலங்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சிறீலங்காவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, பேரணியாகச் சென்றபோது, சிறீலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவி ஒருவரை விரிவுரையாளர் ஒருவர் பாலியல் வல்லுறவு மேற்கொள்ள முயற்சி செய்திருப்பதைத் தொடர்ந்து கொழும்பு, மற்றும் றுஹுணு போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கொள்ளுபிட்டியிலுள்ள அரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்ற மாணவர்கள், கொள்ளுப்பிட்டி சந்தியில் வழிமறிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

No comments: