Wednesday, 13 August 2008

வன்னியில் பசிக்கொடுமையால் பழைய உணவினை உட்கொண்ட நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

உணவு நஞ்சானதால் அதனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பால் தொடக்கத்தில் தட்சனாமருதமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- பெரியமடுவில் குடியமர்ந்து- அதன்பின்பு பெரியமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- வெள்ளாங்குளத்தில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- ஆனைவிழுந்தானில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- தற்போது புதுமுறிப்பில் தங்கியுள்ள புவனேந்திரன் என்பவரின் பிள்ளைகளே பசிக்கொடுமை காரணமாக பழைய உணவினை உட்கொண்டதால் தீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஒன்றரை வயதுடைய புவனேந்திரன் கல்கி

நான்கு வயதுடைய புவனேந்திரன் தயானந்தராசா

ஏழு வயதுடைய புவனேந்திரன் பவிந்தறாஜா

பன்னிரெண்டு வயதுடைய புவனேந்திரன் கோணேஸ்வரி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்று சிறுவர்களே சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: