Wednesday, 13 August 2008

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும் - ரிச்சாட் பெளச்சர்

அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின்போது இணைத்தலைமை நாடுகளுக்கான ஜப்பானிய பிரதிநிதி யசூசி அகாசியைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளரைச் சந்திந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வுக்கான வழிவகைகள் திறந்துவிடப்பட வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினையை படைத்துறை முன்னெடுப்புகளால் மாத்திரம் தீர்வு காணமுடியாது என நான் நம்புகிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்களது முழு உரிமையுடனும் வாழ்வதற்கேற்ற பொறிமுறையொன்று தேவை.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால், சமாதான முன்னெடுப்புக்கள் பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது.

இலங்கையின் அபிவிருத்தி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல், விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் யசூசி அகாசியுடன் நான் கலந்துரையாடியுள்ளேன்.

இலங்கையின் சமாதானப் பேச்சுக்களை நோர்வேயினூடாக முன்னெடுப்பதற்கு, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்காவும் அழுத்தங்களை வழங்கும். இணைத்தலைமை நாடுகளும் தமக்கிடையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ் வருடம் இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பல சிரமங்கள் இருக்கின்ற போதும், எமது சமாதான முன்னெடுப்பு முயற்சிகளை நிறுத்தி விடமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: