விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு கேரளா நீதிமன்றம் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த முத்தையா சபாரத்தினம் என்பவர் கேரளாவின் நெடுமண்டபம் நகரில் வைத்து கேரளா காவல்துறையினர் கைதுசெய்தனர்.
உரிய பயண ஆவணங்கள் இல்லாத நிலையில் இவரை குரவரவு குடியல்வு சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணைகளை நடத்திய காவல்துறையினர் சந்தேகநபர் விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பியதை கண்டறிந்துள்ளனர்.
இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்துகொண்டதாகவும் படையினருக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மண்டபம் அகதி முகாமில் தங்கிருந்த இவர் அங்கிருந்து வெளியேறி கேரளாவுக்கு சென்று அங்கு பல்வேறு இடங்களில் தொழில் செய்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய காவல்துறையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 55 பேர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Wednesday, 13 August 2008
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு - இலங்கைத் தமிழருக்கு கேரள நீதிமன்றம்; சிறைத் தண்டனை விதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment