இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் ரஸ்யா அல்லது அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதி முயற்சியாக பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் பொலன்னறுவையில் வைத்து வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் இராணுவத் தளபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Wednesday, 13 August 2008
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் வல்லமை பிரபாவிடம் இல்லை - இராணுவத் தளபதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment