Tuesday, 12 August 2008

துணைப்படைக் குழுவால் கடத்தப்பட்ட ஐந்து மாணவிகளில் ஒருவர் தப்பினார்

மட்டக்களப்பு பட்டிருப்பிலும், வெல்லாவெளியில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட ஐந்து மாணவிகளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

பட்டிருப்பில் துண்டுப் பிரசுரம் கொடுப்பது போன்று வெள்ளைச் சிற்றூந்தில் கடத்தப்பட்ட குறிப்பிட்ட மாணவி, கிரானில் சிற்றூந்து தரித்தபோது அதிலிருந்து தப்பிச்சென்றிருக்கின்றார்.

தன்னைக் கடத்தும்போது வெள்ளைச் சிற்றூந்தில் ஏற்கனவே இருந்த ஏனைய நான்கு மாணவிகளையும் வெல்லாவெளியைச் சேர்ந்தவர்கள் என இவர் அடையாளம் காட்டியுள்ள போதிலும், அவர்களின் நிலை தொடர்பாக இதுவரை தெரிய வரவில்லை.

கடந்த வாரமும் இதேபோன்று மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டிருந்த ஐந்து பெண்களில் ஒருவர் கொழும்பு கறுவாத்தோட்டத்தில் பேரூந்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: