ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது அமைச்சர்களும் தங்கள் சட்டைப்பைகளை நிரப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்பட்டுவருகின்றனர்
இந்த நிலையில் ஏழைமக்கள் பற்றியும் அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் தேசம் பற்றியும் அவர்கள் கவலைப்படப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவ மாவட்டத்தில் தம்பல பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரக்கட்சி ஆட்சி செய்த காலங்கள் எல்லாவற்றிலும், நாட்டை சுடுகாடாகும் செயற்பாட்டுகளிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது கடந்தகால வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளிலும் இருந்து புலனாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களின் வயிற்றில் அடித்து தமது பரம்பரையினருக்கு சொத்துக்களை சேர்த்துவரும் இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நாட்டை சுபீட்சமாக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment