Saturday, 2 August 2008

யுத்தம் தொடர்பான சிங்களத் தரப்பின் தவறான மதிப்பீடு! - ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ்

தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் குறித்த சரியான மதிப்பீட்டை செய்யக்கூடிய எவரும் சிறிலங்கா இராணுவம் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் அனுகூலங்களை முன்னேற்றகரமானவை எனக் கொள்ள மாட்டார்கள்.


ஏனெனில் வரலாற்றின் போக்கையே தீர்மானிக்கத்தக்கதான இராணுவ நகர்வுகளை தம்மால் மேற்கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்கனவே பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.


என ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள ஈழநாதம் வார இதழில் "யுத்தம்- மதிப்பீடும், ஒப்பீடும்" என்ற தலைப்பிலான பத்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றது: வன்னிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றி விட்டோம்: விரையில் கிளிநொச்சி மீதும், முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம் :

அப்பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் போன்றவை இன்று சிறிலங்கா ஆட்சியாளர்களினதும், படைத்துறையாளர்களினதும் முக்கிய பரப்புரையாகவுள்ளது. இவற்றிற்கு சிறிலங்காவில் இருந்து வெளிவரும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.


ஒரு புறத்தில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அரசாங்கத்தினால் வற்புறுத்தப்பட்டும் வருகின்றது.

இதே சமயம் ஓரளவிற்கு உண்மை நிலையை வெளிப்படுத்த முனையும் ஊடகங்களும் குழம்பிப்போயுள்ளன. இராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி-துணுக்காய்ப் பிரதேசங்களுக்கு அண்மை வரையிலும், இலுப்பைக் கடவையைத் தாண்டியும் முன்னேறியுள்ளது என்பது உண்மையே.

ஆனால, இவை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு கிடைத்த வெற்றி என்றோ, சிறிலங்காப்படை விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்கும் நிலையை எட்டிவிட்டதென்றோ, முல்லைத்தீவும் கிளிநொச்சியும் சிறிலங்காத்தரைப்படையின் கைகளில் எட்டும் நிலைக்கு வந்து விட்டதென்றோ கொள்ளுதல் அபத்தமானதாகும் எனவும் திரு. ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் குறித்த சரியான மதிப்பீடும், ஒப்பீடும் செய்யப்படும் செய்யப்படும் நிலையில், அரைக்கிணறும் தாண்டமுடியாத’ நிலையிலேயே சிறிலங்காப்படை உள்ளதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


அத்தோடு விடுதலைப்புலிகள் இதுவரையில் குறிப்பிடத்தக்கதானதொரு வலிந்த தாக்குலை மேற்கொள்ளாத நிலையில் யுத்தத்தின் போக்கை எவருமே மதிப்பீடு செய்துவிட முடியாது எனவும் ஈழநாதம் பத்தியில் ஜெயராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: