Monday, 11 August 2008

பிரபாகரனின் ஊடகக் குண்டு சிரச

சிரச ஊடகவியலாளர்கள் இருவரை தாக்கி இரண்டு ஒளிப்பதிவு கருவிகளை பறித்துச் சென்ற மேர்வின் சில்வாவுக்கு ஆதரவாகவும் சிரச தொலைக்காட்சியினருக்கு எதிராகவும் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

களனி தொகுதியில் இருந்து பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இது ஜனாதிபதியின் சக்தி, அமைச்சர் மேர்வின் சில்வாவின் பலம், துட்டகைமுனுவின் பலம் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.


அத்துடன் சிரச ஊடகத்தை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தவிர பிரபாகரனின் ஊடக குண்டு சிரச எனவும் மேர்வின் களனி தொகுதிக்காக உதித்த தேவன் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் தமது ஆதரவினை வழங்கியிருந்தமை ஆர்ப்பாட்டத்தின் போது நன்கு உணரமுடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: