Monday, 11 August 2008

கருணா - பிள்ளையான் - புலிகளுக்கு எதிராகவே ஆயுதங்களைத் நீட்டுகின்றனர் -எஸ்.எல் குணசேகர

புலிகளிலிருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்த பிறகு அவர்கள் சிங்கள மக்களுக்கு எதிராகப் படுகொலைகள் செய்யவில்லை.


முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் படுகொலைகள் செய்யவில்லை. எங்களுடைய ஆயதப்படைகளுக்கெதிராகத் தாக்குதல் நடாத்துவதில்லை.

அவர்கள் செய்வதெல்லாம் புலிகளுக்கெதிராகத் தங்கள் ஆயுதங்களைத் திருப்பியது தான். அத்தோடு ஒரு உண்மையையும் சொல்ல வேண்டும் அவர்கள் மக்களைக் கடத்திப் பணயம் வைத்து பணம் அறவிடுகிறார்கள்.

இது அவர்கள் முன்னர் புலிகளி;ன் இருந்து வந்த காரணத்தினாலாக இருக்கக்கூடும் என ஆங்கிலப்பத்திரிகையொன்றில் அதன் கட்டுரையாளர் எஸ்.எல். குணசேகர குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தனது கட்டுரையில் ஐக்கிய தேசியக் கட்சி புலிகளிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்பட் வேண்டும் அNதுபோல் ரி.எம்.வி.பியிடமிந்தும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனக் கூறுகிறது. புலிகளிடமிருக்கும் ஆயுதங்கள் அவர்களைப் பலப்படுத்துவே உதவும்.


அவர்களுடைய ஆயுதங்கள் நாட்டிற்கு எதிரானவை. ஆனால் ரி.எம்.வி.பியினுடைய ஆயுதங்கள் புலிகளுக்கெதிரானவை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி ரி.எம்.வி.பியினுடைய ஆயுதங்களைக் களையச் சொல்வதன் நோக்கமென்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments: