அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கஞ்சிக்குடிச்சாறு வேப்பையடி சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித் தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் நிமால் லுக்கே எனும் உயரதிகாரி உட்பட அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment