Monday, 4 August 2008

மகிந்த ராஜபக்ச சீனாவின் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு பயணம்

சிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் 08 அம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வுகளில் கலந்தகொள்வதன் பொருட்டு சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இது சம்பந்தமான விபரங்கள் வெளியடப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சிறி லங்காவின் அழைப்பை ஏற்று வந்த சீன உதவி வெளிவிவகார அமைச்சர் வூ டவ் ஈ, கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து சீன அரசாங்கத்தின் அழைப்பை அவரிடம் கையளித்துள்ளதாகவும்;, இதன் பொருட்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆறு போட்டிகளுக்காக எட்டு மெய்வல்லுனர்கள் சிறி லங்காவில் இருந்து பீஜிங் செல்லவுள்ளமை குறிப்படத்தக்கது.

No comments: