Wednesday, 13 August 2008

பொலன்னறுவை மாவட்டம் திம்புலாகல வீதியில் ஐ.தே.கவுக்கு பிள்ளையான் குழு மிரட்டல்

tmvplogo1.jpgபொலன்னறுவை மாவட்டம் திம்புலாகல வீதியின் தலுகான, நாமால் பொக்குண பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியினருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய பிள்ளையான் குழுவினர் பிரசார சுவரொட்டிகளை கிழித்தெறிந்ததுடன் சிங்களவர்கள் இந்தப் பிரதேசத்தில் வாக்கு கேட்க வரமுடியாது,

இது தமது பிரதேசம் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (12) பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்றுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, பிள்ளையான் குழுவின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் மங்களம் மாஸ்டர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் அங்கு திடீரென பிரவேசித்துள்ளனர்.


இவர்களில் மூன்று பேரிடம் துப்பாக்கிகள் காணப்பட்டதாகவும் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்ற அச்சத்தில் தாம் பிரசார சுவரொட்டிகளுடன் அங்கிருந்து அகன்று சென்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: