Sunday 3 August 2008

இந்திய படையினருக்கான நினைவுத்தூபியை திறந்து வைக்க இந்திய பிரதமர் மறுப்பு

indian-army-statue.jpg1987 ஆம் ஆண்டு இலங்கையில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவுத்தூபியை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலையீட்டில் பெலவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபியை சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்திய பிரதமரை அழைத்து திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

திறப்பதற்கு முன்னர் இந்திய பிரதமருக்கான மரியாதை அணிவகுப்பை வழங்கும் பயிற்சிகளில் நேற்று படையினர் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் எம்.கே. நாராயணன், உள்ளிட்டோர் பார்வையிட்டிருந்தனர்.

இலங்கையில் இந்திய தலையீடுகள் அதிகரித்துள்ளமை மேலும் உறுதிப்படுத்த கூடும் என்ற எண்ணத்தில் இந்திய பிரதமர் நினைவுத்தூபியை திறந்து வைக்கும் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு தான் சார்பாக இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அமைக்கப்பட்ட இந்திய படையினரின் நினைவுத்தூபியை இந்திய பிரதமர் திறந்து வைக்க மறுத்தமை தொடர்பில் மகிந்தராஜபக்ஸ பெரும் தர்மசங்கடத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 comment:

ttpian said...

Indian PM is a selfish North Indian+supported by another selfish Bengali Pranab mugergee and these 2 ill advised by MK narayanan(Malayalala iyengar+Sivashankara menon(another malayali) and AK anthony another malayali Defence minister.....Oh! God! Please save the Tamil community!