தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் படுகொலை செய்துவரும் துணைப்படைக் குழுக்கள், மக்களின் படுகொலையை நினைவுகூர்ந்து சிலை திறந்து வைப்பது, மக்களை அவமதிக்கும் செயல் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா துணைப்படை T.M.V.P குழுவினர் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்பவர் வீரமுனை படுகொலையை நினைவுகூர்ந்து சிலை திறந்து வைத்திருப்பதற்கு, அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கண்டனம் தெரிவித்தார்.
இனியபாரதி சிலையை திறந்து வைத்ததன்மூலம், புனித போராட்டத்திற்கு தமது உயிர்களைக் கொடுத்த மக்களை அவமதித்த செயல் என அவர் கூறினார்.
தன்னை படுகொலை செய்ய முயற்சி செய்த இனியபாரதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு அடுத்த மாதம் 16ஆம் நாள் விசாரணைக்கு வர இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
Thursday, 14 August 2008
துணைப்படைக் குழுக்கள் சிலை திறந்து மக்களை அவமதிப்பு – சந்திரகாந்தன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment