Thursday, 14 August 2008

துணைப்படை T.M.V.P குழுவினர் வவுனியாவில் கப்பம் அறவிடுகின்றனர்

சிறீலங்கா துணைப்படை T.M.V.P குழுவினர் வவுனியாவில் கப்பம் அறவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, வர்த்தகர்கள் எமது வவுனியாச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

துணைப்படை PLOTE குழுவினருக்கு போட்டியாக கப்பம் அறவீடு இடம்பெறுவதாகவும், இந்தக் குழுக்களால் தாம் பெரும் இன்னல்களையும், ஆபத்துக்களையும் எதிர்நோக்குகின்ற போதிலும் அவற்றை வெளியே கூற முடியாது இருப்பதாகவும், வர்த்தகர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பச்சை நிறத்தில் சுயவிபர அட்டை ஒன்றை வழங்கி, தம்மை துணைப்படை T.M.V.P குழுவின் அங்கத்தவர்கள் என அறிமுகம் செய்யும் குறிப்பிட்ட நபர்கள், தேவையேற்பட்டால் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறும் கூறுகின்றனர்.

No comments: